Header Top Ad
Header Top Ad

போதைப் பொருள் ஒழிப்பு: கோவை போலீஸ் எஸ்.ஐ.,க்கு முதலமைச்சர் விருது!

கோவை: போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட கோவை போலீஸ் உதவி ஆய்வாளருக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபாலன் (33). இவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

மேலும் கோவை மாநகர போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு சிறப்புப் படையிலிருந்து வருகிறார்.

தனபாலன் இதுவரை 55 போதைப் பொருள் வழக்குகளில்169 பேரைக் கைது செய்துள்ளார். அவர்களிடமிருந்து161 கிலோ கஞ்சா மற்றும்77 கிராம் மெத்தபெட்டமையின் எனப்படும் போதைப் பொருள் ஆகியவற்றைக் கைப்பற்றி உள்ளார்.

குற்றவாளிகளிடம் இருந்து 29 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 5 கார்களையும் பறிமுதல் செய்துள்ளார். இவரின் அதிரடி நடவடிக்கையால் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து உள்ளது.

Advertisement

போதைப்பொருள் ஒழிப்பில் கோவை மாநகரில் சிறப்பாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து தனபாலனுக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை அவர் இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் பெற உள்ளார்.

தமிழ்நாட்டில் 15 போலீஸ் அதிகாரிகளில் கோவை மாநகரில் விருது பெரும் ஒரே ஒரு எஸ்.ஐ தனபாலன் ஆவார். அவரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Advertisement

1 COMMENT

Comments are closed.

Recent News