கோவை: சரவணம்பட்டி அருகே 22 வயது வாலிபர் ஒருவர் போதையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் டேவிட் ஆரோக்கியம்(22). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 7 மாதமாக வேலை பார்த்து வந்தார்.
நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்த அறையில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பர் ஒருவருடன் டேவிட் ஆரோக்கியம் மது அருந்தினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள் அவரை பைக்கில் ஏற்றி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து சர்க்கார் சாமக்குளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மது அருந்திய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.