கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்டத்தில் ரூ.6.18 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்பவர்கள் குறித்து சேலம் கோட்டம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் நடத்திய 13,548 பரிசோதனைகள் மூலம் மொத்தமாக ரூ.6.18 அபராதம் வசூலித்ததாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு, 1.6% கூடுதல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், 4.9% கூடுதலாக அபராதங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒழுங்கற்ற பயணங்கள், பதிவில்லாமல் சரக்குகளை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட வழக்குகளும் பதியப்பட்டு இந்த அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தின் பரிசோதனை குழுக்கள் தொடர்ச்சியாக பரிசோதனை பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.