கோவை: கோவை குற்றாலம் கடந்த மே மாதம் 23ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 11 ம் தேதி திறக்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்குகிறது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தும், செல்கின்றனர்.
கோவை குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை வனத் துறையினர் தனி வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு இடையில் கோவை குற்றாலத்தில் அவ்வப் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதை வனத்துறையினர் கண்காணித்து, நீர்வரத்து அதிகரித்து இருந்தால், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பார்கள். அதன்படி கடந்த மே மாதம் 23 ம் தேதி தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மழைப்பொழிவு குறைந்ததால், அருவியில் நீர்வரத்தும் குறைந்து உள்ளது. இதனால் கடந்த மே மாதம் மூடப்பட்ட கோவை குற்றாலம், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத் துறையினர் அனுமதி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.