கோவை: கோவையில் அரசு ஊழியர்களுக்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் என்ன நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.
இதில் சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு அரசு ஊழியர்களுக்கு ரத்த பரிசோதனை, பல், கண் பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டனர்.