கோவை: கோவையைச் சேர்ந்த ஓவியக்கலைஞர் இளையராஜாவின் உருவப்பட்டத்தை ஒரு தபேலாவில் தாளமிட்டபடியே வரைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்
கோவையைச் சேர்ந்தவர் யு.எம்.டி ராஜா. காலச்சூழலுக்கு ஏற்ப கலைப்பொருட்களை உருவாக்கி கோவை மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கலைப்பொருட்கள் மற்றும் ஓவியங்களையும் வரைந்து வருகிறார்.
இவர் முத்தம் கொடுத்தே கமல்ஹாசன் ஓவியத்தை வரைந்திருந்தார், மேலும், பாட்டிலுக்குள் விஜய் ஓவியத்தை வரைந்தும் அசத்தினார்.
இதனிடையே தற்போது சிறிய தபேலா மீது இசையமைப்பாளர் இளையராஜாவின் ஓவியத்தை வரைந்துள்ளார்.
தபேலா மீது ஓவியம் வரைவது பெரிய விஷயமா? என்று கேட்டுவிட வேண்டாம். பின்னணியில் இசைக்கும் இசைக்கேற்ப, ஒரு குச்சியை வைத்து தபேலாவில் தாளமிட்டபடியே இளையராஜா ஓவியத்தை வரைந்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.