கோவை: அதிமுக தனி பெரும்பான்மை என ஈபிஎஸ் பேசியிருப்பதற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து பேச ஆரம்பிக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து வரும்போது அண்ணாமலையிடம் அதிமுக தனி பெரும்பான்மை பெரும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியிருந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து பேச ஆரம்பிக்கிறேன் என பதில் அளித்துச் சென்றார்.
எனவே ஆகஸ்ட் மாதம் முதல் பாஜக சார்பில் கூட்டணி குறித்து பல்வேறு தகவல்கள் செய்தியாளர்கள் சந்திப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது