மேட்டுப்பாளையத்தில் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்த வளர்ப்பு நாய்கள்

கோவை; மேட்டுப்பாளையம் பகுதியில் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை உள்ளே நுழைய விடாமல் தடுத்த வளர்ப்பு நாய்கள்.

காரமடை கண்ணார்பாளையம் அர்ச்சனா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(35).இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.சந்தை வியாபாரியான இவரது வீட்டில் இரு நாய்களை வளர்த்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நேற்று இவரது வீட்டு காம்புவுண்டிற்குள் சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று வந்துள்ளது.பாம்பு வருவதை கண்ட வளர்ப்பு நாய்கள் பாம்பை வீட்டினுள் வரவிடாமல் தொடர்ந்து தடுத்து தொடர்ந்து குரைத்ததோடு, பாம்பை விடாமல் தாக்கியது.

இதனையடுத்து பாம்பு அங்கிருந்த காருக்கு அடியில் புகுந்தது.பின்,பாம்பினை அருகில் உள்ள இளைஞர் ஒருவர் பிடித்து வெளியே விட்டார்.

Recent News