கோவை: 2 மாதங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு மருதமலை லிப்ட் வரும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீடு குழு தலைவர் தெரிவித்துள்ளார்…
கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீடு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த் குழுவின் தலைவர் காந்திராஜன்,
கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடைபெற்றது. அதில் சிறைசாலை, அவிநாசி மேம்பாலம் ஆய்வு மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார். அவிநாசி மேம்பாலம் 3 மாதங்களில் முடியும் நிலையில் உள்ளது என்றார். சிறைச்சாலை
கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் , அவர்கள் செய்யும் பணிகளுக்கு ஊதியம் போன்றவை கேட்டறியப்பட்டதாகவும்
சிறையில் கல்வி கற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் சிறையை வீடு போன்று மிக சிறப்பாக வைத்து உள்ளார்கள் என புகழ்ந்தார்.
Advertisement

மருதமலையில் லிப்ட் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்துள்ளதாகவும்
2 மாதங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு மருதமலை லிப்ட் வரும் என்றார். மேலும் அங்கு தெற்கு ஆசியாவில் உயரமான முருகன் சிலை வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, அதற்கான ஆய்வு பணிகளும் நடைபெற்றதாக தெரிவித்தார்.
தெற்கு ஆசியாவில் வேளாண் பல்கலைக்கழகம் மிகச்சிறப்பாக உள்ளது என்று கூறிய அவர் அத்தனை பூச்சிகள் இருப்பதை அங்கு சென்று தான் நாங்கள் தெரிந்து கொண்டதாக கூறினார்.
தென்னை வெள்ளை பூச்சிகளை கட்டுபடுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர் என்றும் விவசாயிகள் பயனுள்ள வகையில் ஆய்வு கூட்டம் நடத்தி உள்ளோம் என்றார்.
கோவையில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டு உள்ளனர் எனவும் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் தொடர்ச்சியாக ஆய்வு கூட்டம் நடத்தி பணிகளை சிறப்பாக மேற்கொண்டு உள்ளார் என்றும் கூறினர். மத்திய அரசு சார்பில் 13 துறைகளில் சிறப்பாக பணி செய்து உள்ளதாக தெரிவித்தார்.
வன விலங்கு பிரச்சனை தீர்வு காண வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள் என்றும்
காட்டுப்பன்றி விளைநிலம் பாதிப்பு நிவாரணம் கூட்டி தர கோரி உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ஆகாய தாமரை அதிகம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்ளிட்டோர் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார்.
சாலைகள் மோசமாக இருப்பது குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிறையில் மரணம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் அதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதாகவும் ஏதோ ஓரிரு சம்பவங்களை வைத்து அனைத்தையும் குறை சொல்லி விட முடியாது என தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் அருகே சிறை நிர்வாகம் மாறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் மலைவாழ் மக்கள் கடன் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். நொய்யல் சீரமைப்பு குறித்து ப்ரொபோசல் வழங்கப்பட்டுள்ளது நிதி ஒதுக்கப்படவில்லை என தெரிவித்தார்.