கோவை: தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கோவையில் முக்காடு அணிந்தும் ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்…
தமிழ்நாடு முழுவதும் அனைத்து தலைநகர்களிலும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஓய்வூதியத்தை அகவிலைப்படியுடன் 6750 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறித்தி இன்று முக்காடு அணிந்தும் ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவையை சேர்ந்த சுமார் 30 பேர் கலந்து கொண்டு முக்காடு அணிந்தும் ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
விலைவாசி அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ள போதிலும் ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு இந்த அரசாங்கம் 2000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்குவதாக
எம்.எல்.ஏ க்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுகிறது, காவல்துறையினர் மோப்பசக்தி இழந்த ஓய்வு பெற்ற நாய்களுக்கு கூட பராமரிப்பிற்கு 8000 ரூபாய் வழங்கப்படுகிறது என்றனர்.
இந்த திட்டத்தை உலகம் போற்றும் திட்டமாக கொண்டு சென்ற நாங்கள் தற்போது மதிய உணவிற்கு சத்திரங்களிலும், கோவில்களும் கையேந்தி நிற்கும் சூழலை இந்த அரசு உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தனர். முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் போது கூட இது வேண்டாம் என்று அழைத்து பேசியிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் இந்த அரசை எதிர்கட்சி வரிசையில் நிற்க வைக்க கூடிய செயலை செய்வோம் என்றனர். மேலும் இனிவரும் நாட்களில் மக்களை சந்தித்து எங்களது நிலைமையை துண்டு பிரசுரங்கள் மூலம் தெரிவிக்க உள்ளதாக கூறினர்.