கோவை: சொக்கம்புதூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றாவிட்டால் அனைத்து மக்களும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவை, சொக்கம்புதூர் பகுதியில் உள்ள மயானத்தை மாநகராட்சி அமைதியுடன் கழிவுநீர் நிலையம், சுத்திகரிப்பு நிலையம் அமைவது கண்டித்து இந்து முன்னணி சார்பாக கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் டவுன் ஹால் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், சொக்கம்புதூர் மயானத்தில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதை தடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு அளித்தும் தற்பொழுது வர எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் வரும் காலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றாவிட்டால் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் காவல் துறையினர் அனுமதி வழங்குவதில்லை அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாகவும் இந்து முன்னணியினர் குற்றச்சாட்டுகின்றனர்.