கோவை: கோவை வரும் இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை ரயில் பாதைகளில் பாயிண்ட் மற்றும் குறுக்கு இணைப்புகள் பராமரிப்பு/மேற்கொள்ளப்படுவதால், ஜூலை 26 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
எர்ணாகுளம் – டாடாநகர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 18190)
எர்ணாகுளம் ஜங்ஷனில் இருந்து காலை 07.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், வழக்கமான போதனூர் – இருகூர் வழியை தவிர்த்து, போதனூர் – கோயம்புத்தூர் – இருகூர் மார்க்கமாக இயங்கும்.
ஆழப்புலா – தன்பாத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 13352)
ஆழப்புழாவிலிருந்து காலை 06.00 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோயம்புத்தூர் ஜங்ஷன் வராது.
இந்த ரயில் போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். எனவே, போதனூர் ரயில்நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் ஏற்படுத்தப்படும்.
போத்தனூர் ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் 12.17 மணிக்கு நுழைந்து, 12.20 மணிக்கு புறப்படும்.
பயணிகள் இந்த மாற்றங்களை முன்கூட்டியே கவனித்து திட்டமிட்டு பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Two coimbatore trains diverted