சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கோவையில் குழந்தைகளின் மாறுவேட பேரணி

கோவை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து குழந்தைகள் மாறுவேடத்தில் பேரணி மேற்கொண்டது பலரையும் கவர்ந்தது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குழந்தைகள் அமைப்பான Children Islamic Organisation சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று குழந்தைகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. “மண்ணின் கைகள் இந்தியாவில் இதயங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரங்கள், செடி கொடிகள், பழங்கள், காய்கறிகள் போன்று வேடமணிந்தும் விவசாயிகள் போன்ற வேடம் அணிந்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதவிகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

கோவை கரும்புக்கடை பூங்கா நகர் பகுதியில் துவங்கிய இந்த பேரணியானது இலாஹி நகர், பிஸ்மி நகர், சலாமத் நகர் ஆகிய பகுதி வழியாக சென்று கரும்பு கடை பகுதியில் நிறைவடைந்தது.

நூற்றுக்கணக்கான குழந்தைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாறுவேடத்தில் பேரணி மேற்கொண்டது அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp