கோவை: ஆடிபூரம் தினத்தை முன்னிட்டு கோவை சாரதாம்பாள் கோவில் 1,25,000 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
ஆடிபூரம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் 1,25,000 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
ஆடி அம்மனுக்கு உகந்த மாதமாக கருதபடுகிறது. அம்மனுக்கு விரதம் இருப்பது, அம்மன் கோவில்களுக்கு செல்வது நேர்த்திக்கடன் செலுத்துவது என இம்மாதத்தில் பல்வேறு விஷயங்களை பக்தர்கள் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் இன்று ஆடிபூரம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 25 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
கோவில் நுழைவாயில், அம்மன் சன்னதி முழுவதும் பல வண்ண வளையல்களால் அலங்கரிக்கப்பட்டது.
ஆடி பூரம் வழிப்பாட்டில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.