ஆடிபூரத்தை முன்னிட்டு கோவையில் அம்மனுக்கு லட்சம் வளையல்களால் அலங்காரம்

கோவை: ஆடிபூரம் தினத்தை முன்னிட்டு கோவை சாரதாம்பாள் கோவில் 1,25,000 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

ஆடிபூரம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் 1,25,000 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

Advertisement

ஆடி அம்மனுக்கு உகந்த மாதமாக கருதபடுகிறது. அம்மனுக்கு விரதம் இருப்பது, அம்மன் கோவில்களுக்கு செல்வது நேர்த்திக்கடன் செலுத்துவது என இம்மாதத்தில் பல்வேறு விஷயங்களை பக்தர்கள் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில் இன்று ஆடிபூரம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 25 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

Advertisement

கோவில் நுழைவாயில், அம்மன் சன்னதி முழுவதும் பல வண்ண வளையல்களால் அலங்கரிக்கப்பட்டது.
ஆடி பூரம் வழிப்பாட்டில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் 40 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்… மாநகராட்சி தீவிரம்…!

கோவை: தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு, கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் சுமார் 40 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதுதவிர, வழக்கமாகச் சேகரிக்கப்படும் குப்பைகள் 220 டன் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கோவையில் நேற்று...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...