கோவை: கோவையில் பெட்ரோல் பங்கிற்கு வந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை-பொள்ளாச்சி சாலை குறிச்சி குளம் எதிரே பாரத் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு பெட்ரோல் நிரப்ப ஆம்னி கார் ஒன்று வந்துள்ளது.
இதனிடையே காரில் திடீரென தீப்பிடித்தது. நொடிப்பொழுதில் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது.
இதுகுறித்து பங்க் ஊழியர்கள் தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளித்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் கார் முழுவதும் எரிந்தது.
பெட்ரோல் பங்கில் கார் கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.