கோவை: மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் கோவை மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
தமிழ்நாடு மாநில ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் சார்பில் மாநில சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் போட்டியின் 6 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் மாணவர்கள் அனேகன், அந்துவன், அதிரன், ரிதுல் ஆகியோர் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்தனர்.
8 வயதுக்குட்பட்ட சிறுமியர்கள் பிரிவில் அஷ்வதா, கிரித்திக்ஷா முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். சிறுவர்கள் பிரிவில் மித்ரன் பயங்க் முதல் இடத்தையும், தர்ஷன்பாண்டி இரண்டாம் இடத்தையும் பிடித்து அசத்தினர்.
கோவை செய்திகளை மொபைலில் பெற எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
கோவை மாணவர்கள் மொத்தம் 11 தங்கப் பதக்கங்களையும், 7 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளனர். இவர்கள் வடவள்ளியைச் சேர்ந்த ரிங்ஸ் சென்டரில் பயிற்சியாளர் மதன்குமாறிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.