கோவை: கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இன்று (01.08.2025) கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்தில் 68வது வார்டுக்கு சிவானந்த காலனி, வியசமந்திர் மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.
பொள்ளாச்சி நகராட்சியில் 5,6,7 வார்டுகளுக்கு மகாலிங்கபுரத்திலுள்ள, மீனாட்சி மஹாலிலும், வால்பாறை நகராட்சியில் 9,10,11,12 ஆகிய வார்டுகளுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,
மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 6,7,8,9,10,12,13 ஆகிய வார்டுகளுக்கு வார்டு8-ல் உள்ள ஸ்ரீசௌடேஸ்வரி மஹாலிலும், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் சுப்பேகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, தாத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு சுப்பேகவுண்டன்புதூரில் உள்ள சஹானா மஹாலிலும்,
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் குப்பனூர், வடக்கலூர் ஊராட்சிகளுக்கு ஆனையூர் ராணி மஹாலிலும் என மொத்தம் 6 இடங்களில் கோவையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.
கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த செய்தியை உங்கள் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.