கோவையில் விமான கண்காட்சி… 2 நாட்களே… உடனே புறப்படுங்க…!

கோவை: கோவையில் நடைபெற்ற விமானவியல் கண்காட்சியை உற்சாகமாக பள்ளி மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் நேரு விமானவியல் கல்லூரியில் “ஏரோ பிளஸ் 2025” எனும் விமானவியல் கண்காட்சி இன்று துவங்கியது.

மூன்று நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக விமானங்கள், ட்ரோன்கள், விமானத்தின் பாகங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் அண்டார்டிகா ஆப்பிரிக்கா போன்ற கண்டங்கள் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய மாதிரி அறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முதல் இரண்டு நாட்கள் பள்ளி மாணவர்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்படும் நிலையில் முதல் நாளான இன்று பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் வருகை புரிந்து இக்கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

Advertisement

மேலும் விமானம் எவ்வாறு இயங்குகிறது? விமான பாகங்களின் பயன்கள் என்ன என்பது குறித்து மாணவர்களுக்கு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எடுத்துரைத்தனர். மேலும் பல்வேறு மாணவ மாணவிகள் விமானங்கள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

கோவை: விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு நாளை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோவை மாநகரில் நாளை 16.09.2026 ஆம் தேதி புதன் கிழமை விநாயகர் சிலை ஊர்வலமானது 12.00 மணிக்கு குனியமுத்தூர்...

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...