Header Top Ad
Header Top Ad

கோவையில் இன்று கல்விக் கடன் முகாம்: மாணவர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

கோவை: உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம் இன்று நடைபெற இருப்பதாகவும், இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்லூரிகள் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகள் தங்கள் கல்விக்கான கட்டணத் தொகையினை கல்விக் கடனாகப் பெறுவதற்கு கல்விக் கடன் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (ஆகஸ்ட் 2ம் தேதி) காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த கல்விக் கடன் முகாம் தொடங்கி நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொண்டு கல்விக்கடன் பெற விருப்பப்படும் மாணவர்கள் தேவையான ஆவணங்களை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • பான் அட்டை
  • ஆதார் அட்டை
  • 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • டிசி
  • கல்லூரிக் கட்டண ரசீது
  • கல்லூரி சேர்க்கை ரசீது
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2
  • குடும்ப அட்டை நகல்
  • வங்கிக் கணக்கு புத்தகம்
  • Bonafide சான்றிதழ்

ஆகிய ஆவணங்களுடன் கல்விக் கடன் மேளாவில் கலந்து கொள்ளலாம்.

கோவை செய்திகள் & அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Advertisement
  • இளங்கலை பட்ட சான்றிதழ்
  • இளங்கலை மதிப்பெண் சான்றிதழ்
  • முதுகலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான ஆவணங்கள்
  • கல்லூரி அடையாள

ஆகிய ஆவணங்களைக் கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயனுள்ள இந்த செய்தியை மாணவர்கள் மற்றும் கல்வி சார்ந்த குழுக்களுக்கு பகிரலாம். கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்களுக்கு இது உதவலாம்.

Recent News