கோவை மாநகர போலீசில் 125 பேர் புதிதாக சேர்ப்பு!

கோவை: பயிற்சி நிறைவு செய்த 125 பேர் போலீசார் கோவை மாநகர போலீசில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் சார்பில், தேர்வு செய்யப்பட்ட 2ம் நிலை பயிற்சி காவலர்களுக்கு 7 மாதங்கள் போலீஸ் பயிற்சி பள்ளியில் பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Advertisement

ஆயுதப் பயிற்சி, அணிவகுப்பு பயிற்சி, கலவர தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகள் முடிவடைந்த பின்னர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியிலிருந்து பல்வேறு மாவட்ட ஆயுதப்படைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அவ்வாறு பயிற்சி நிறைவு செய்த 125 பேர் கோவை மாநகர ஆயுதப்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கோவை வந்து பணியில் சேர்ந்தனர்.

Advertisement

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு செய்த போலீசார் பிரித்து அனுப்பப்படுவார்கள். அவ்வாறு வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 125 பேர் தேர்வு செய்யப்பட்டு கோவை மாநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஆயுதப்படையில் இருந்து மாநகர பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Recent News

18வது கோயம்புத்தூர் விழா நடைபெறும் தேதியும் முக்கிய நிகழ்வுகளும் அறிவிக்கப்பட்டன…

கோவை: கோயம்புத்தூர் விழாவின் 18வது பதிப்பு கோலாகலமாக துவக்கியது. கோவை மாநகர் ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த கோயம்புத்தூர்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp