கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடங்கள்!

கோவை: கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

Advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இன்று (7.8.2025) கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்தில் 23வது வார்டுக்கு சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

மேற்கு மண்டலத்தில் உள்ள 16வது வார்டுக்கு தாடகம் ரோடு, வித்யா காலனியில் உள்ள கே.வி.எம். மஹாலிலும், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 14,15,25 ஆகிய வார்டுகளுக்கு பங்களா மேடு அருகில் உள்ள பதிரப்பன் கல்யாண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது.

Advertisement

பொள்ளாச்சி நகராட்சியில் 8,9,10 ஆகிய வார்டுகளுக்கு பல்லடம் சாலையில் உள்ள ரோட்டரி ஹாலிலும், ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில் 1,2,3,4,5,6,7,8,9 ஆகிய வார்டுகளுக்கு பூங்கோதை நாயகி அம்மன் மண்டபத்திலும்,

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இடையர்பாளையம், போகம்பட்டி, வடவள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு போகம்பட்டியில் உள்ள எஸ்.எச்.சி கட்டடத்திலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Recent News

18வது கோயம்புத்தூர் விழா நடைபெறும் தேதியும் முக்கிய நிகழ்வுகளும் அறிவிக்கப்பட்டன…

கோவை: கோயம்புத்தூர் விழாவின் 18வது பதிப்பு கோலாகலமாக துவக்கியது. கோவை மாநகர் ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த கோயம்புத்தூர்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp