கோவை: பிட் லைன் பணிகள் காரணமாக எர்ணாகுளம் – பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கே.எஸ்.ஆர் பெங்களூர் ரயில் நிலையத்தில் பிட் லைன் பணிகள் நடைபெற உள்ளதால் இரண்டு ரயில்களின் இயக்கங்களில் மாற்றம் செய்யப்படுகிறது. பிட் லைன் பணிகள் முடியும் வரை, கே.எஸ்.ஆர் பெங்களூர் ரயில் நிலையத்திற்கு பின்வரும் ரயில்கள் செல்லாது.
எர்ணாகுளம் – பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 12678)
எர்ணாகுளம் ஜங்சனில் இருந்து இந்த காலை 9.10 மணிக்கு புறப்படும் இவ்விரைவு ரயில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 15ம் தேதி வரை SMVT பெங்களூரு ரயில் நிலையம் சென்றடையும். KSR பெங்களூரு ரயில் நிலையத்திற்குச் செல்லாது.
இந்த ரயில், கர்மலராம் ரயில் நிலையத்திலிருந்து பயப்பனஹள்ளி வழியாக விடப்படும். எனவே, இந்த ரயில் பெங்களூரு கன்டோன்மென்ட் மற்றும் KSR பெங்களூரு நிலையங்களில் நிற்காது.
பெங்களூரு – எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 12677)
இந்த ரயிலின் மீள் பயணம், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 16ம் தேதி வரை SMVT பெங்களூரு ரயில் நிலையத்தில்தான் தொடங்கும்.
காலை 6.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், பயப்பனஹள்ளி வழியாக கர்மலராமை சென்றடைந்து, அங்கிருந்து வழக்கமான பாதையில் இயங்கும்.
எனவே, இந்த ரயிலும் KSR பெங்களூரு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் நிலையங்களில் நிற்காது.
இம்மாற்றங்களை பயணிகள் முன்னே அறிந்து பயணத் திட்டங்களை தயார் செய்து கொள்ளவும் தாமதமின்றி அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த தகவலை, பெங்களூரு சென்று பணியாற்றும் நம்ம ஊர் மக்களுக்கு பகிர்ந்திடுங்கள்.
கோவை செய்திகள், கோவைக்கான அரசு மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர். குழுவில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்.
இந்த ரயில் நின்று செல்லும் நிலையங்கள்:
- Ernakulam Junction (ERS) (துவக்க நிலையம்)
- Aluva (AWY)
- Thrissur (TCR)
- Ottappalam (OTP)
- Palakkad Junction (PGT)
- Coimbatore Junction (CBE)
- Tiruppur (TUP)
- Erode Junction (ED)
- Salem Junction (SA)
- Dharmapuri (DPJ)
- Hosur (HSRA)
- Carmelaram (CRLM)
- SMVT Bengaluru (முடிவடையும் இடம்)