கோவையில் ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை: ஊர்ப்புற நூலகங்களை தரம் உயர்த்திட வலியுறுத்தியும் காலமுறை ஊதியம் தர வலியுறுத்தியும் ஊர்ப்புற நூலகர்கள் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் கோயம்புத்தூர் மண்டலத்தை சேர்ந்த ஊர்ப்புற நூலகர்கள் ஊர்ப்புற நூலகங்களை தரம் உயர்த்திட வலியுறுத்தியும் காலமுறை ஊதியம் தர வலியுறுத்தியும் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் ஊர்ப்புற நூலகர்கள், 1915 ஊர்ப்புற நூலகங்களை தரம் உயர்த்திட வலியுறுத்தியும் தேர்தல் வாக்குறுதியின் படி காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தியும் கோவை, மதுரை, விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி கோவையில் சிவானந்த காலனி பவர் ஹவுஸ் பகுதியில் கோவை மண்டலத்தை சேர்ந்த ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் கோவை நீலகிரி ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி திருப்பூர் கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

தமிழகத்தில் உள்ள ஊர்புற நூலகங்களை அதன் பயன்பாட்டின் அடிப்படையில் தரம் உயர்த்த வேண்டும் என்றும் இந்த ஆட்சி முடிவதற்குள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent News

AI தொழில்நுட்பம் நிலையானது அல்ல- கோவையில் நம்பி நாராயணன் கூறிய தகவல்…

கோவை: AI தொழில்நுட்பத்தை தவிர்க்க முடியாது என்றும் அதே சமயம் அதை நிலையானது அல்ல என்றும் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார். கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp