கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் 2025-2026ம் கல்வியாண்டின் முதுநிலை படிப்புகளுக்கான (PG) மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
கோவை அரசு கலைக்கல்லூரியில் மொத்தம் 21 முதுநிலைப் படிப்புகள் 2 ஷிப்ட்டுகள் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
இதில் MCA படிப்பைத் தவிர்த்து, மற்ற அனைத்து படிப்புகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு (விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் பிள்ளைகள், என்.சி.சி., உள்ளிட்டவை) கலந்தாய்வு ஆகஸ்ட் 11 காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.மேலும், பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
முதல் ஆண்டுக்கு மொத்தம் 557 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள நிலையில், 6,514 மொத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், மாணவர் சேர்க்கையானது மதிப்பெண்கள் மற்றும் சமூக ஒதுக்கீட்டின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என்றும் கல்லூரி முதல்வர் எழில் தெரிவித்துள்ளார்.
சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும், அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன், தங்கள் துறைகளில் காலை 9 மணிக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.