Header Top Ad
Header Top Ad

சுதந்திர தினம் கிப்ட்: ரயில்வே ஊழியர்களுக்காக கோவையில் சிறப்பு கோச்! – Photostory

கோவை: ரயில்வே பணிமை ஊழியர்களுக்காக கோவையில் பிரத்தியேகமாக ரயில் பெட்டி ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை ரயில்நிலைய பணிமனையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Advertisement

இவர்களுக்கான ஓய்வு அறை வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனிடையே சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு பெட்டி ஒன்றை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பெட்டியில், ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்கான இடம், உணவு உண்பதற்கான இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பெட்டி ஊழியர்களுக்காக அர்ப்பணிக்கப்படும் நிலையில், அதில், தேசியக்கொடி, நேதாஜி மற்றும் காந்தியடிகளின் படங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்களை கோவை ரயில்வே பணிமனை ஊழியர் அருண் என்பவரே வரைந்துள்ளது மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

Advertisement

பள்ளி மாணவர்களுக்கான சுதந்திர தின அலங்காரப் பொருட்கள் மற்றும் ஆர்டர் செய்யவதற்கான லிங்க் கீழே…

Advertisement

Advertisement

Recent News