கோவை: வெள்ளலூரில் சுற்றுலா சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வெள்ளலூர் திருவாதிரை நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (42). இவர் தொடர் விடுமுறை காரணமாக கடந்த 15ம் தேதி குடும்பத்தினருடன் தஞ்சாவூருக்கு சுற்றுலா சென்றார்.
நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்று இருந்தது தெரியவந்தது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
இதுகுறித்து மணிவண்ணன் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை கைப்பற்றினர்.
இதையடுத்து போலீசார் மணிவண்ணன் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிவிடி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Affordable CCTV Cameras for Your Home Security!



