கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் நீர் வரத்து சீரானதால் நாளை மீண்டும் திறக்கப்படுவதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து, இதன் காரணமாக அருவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த வாரம் 17 ம் தேதி சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல தடை விதித்து இருந்தனர்.
கோவை மட்டுமின்றி வெளி ஊர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால் கோவையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கூட்டம் அலைமோதும்.
வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், கோடைகால வார இறுதி நாட்களில் வழக்கத்தை விட இரண்டு மடங்கு சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.
இந்நிலையில் கடந்த மே மாதம் பெய்த கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாக கோவை குற்றாலம் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலாவிற்கு வனத் துறையினர் தடை விதித்து இருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட, கோவை குற்றாலம், அண்டை மாவட்டமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வந்ததால், மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்ததால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மீண்டும் சூழல் சுற்றுலாவிற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் கடந்த கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக கடந்த வாரம் மீண்டும் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கின் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் கோவை குற்றாலத்தில் நீராடுவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் வர வேண்டாம் என வனத்துறை சார்பாக அறிவிப்பு வெளியிட்டு பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மேலும் காலவரையின்றி மூடப்படுவதாக, வெள்ளப்பெருக்கு சீரான பின்னர் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்பொழுது அருவியில் நீர்வரத்து சீரானதால் நாளை 22 ம் தேதி நாளை வெள்ளிக்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.