Header Top Ad
Header Top Ad

கோவையில் இந்த வார வானிலை எப்படி? வானிலை மையம் அறிவிப்பு

கோவை: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கோவையில் அதிகபட்சமாக 33.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவாகியுள்ளது.

Advertisement

சென்னை வானிலை மையத்தின் முன்னறிவிப்பின்படி, இன்று (ஆகஸ்ட் 22) மற்றும் நாளை (ஆகஸ்ட் 23) கோவையில் வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நாட்களில் குறைந்தது 23 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம்.

ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை. இந்த இரண்டு நாட்களும் குறைந்தது 23 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம்.

கோவையில் ஆகஸ்ட் 27ம் தேதி மீண்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 28ம் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அன்றைய தினம் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

இந்த இரண்டு நாட்களும் குறைந்தது 23 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம்.

மொத்தத்தில், இந்த வாரம் கோவையில் வெப்பநிலை அதிகம் இல்லாமல், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை கணிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை. அவ்வாறு மாற்றமடைகையில் வானிலை மையம் புதிய அறிவிப்புகளை வெளியிடும். நமது செய்தித்தளத்தில் அப்டேட் செய்கிறோம். இணைந்திருங்கள்.

Advertisement

Recent News