கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களின் பெற்றோரை குறி வைத்து கல்வி உதவித்தொகை என்ற பெயரில் நூதன மோசடி தற்பொழுது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
கல்வித்துறையில் இருந்து உதவித்தொகை அனுப்புகிறோம் என நூதன முறையில் ஒரே பள்ளியில் ப்யின்று வெளியேறிய மாணவர்களின் பெற்றோர்களுக்கு கால் செய்து பணத்தை திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை தனியார் கல்லூரியில் பயிலக்கூடிய மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் இருந்து அழைக்கிறோம் கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என பேசி வீடியோ கால் மூலம் ஜிபி போன் பே மூலம் ஸ்கேன் செய்ய வலியுறுத்தி ஒவ்வொரு நபரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் வரை மர்ம கும்பல் ஆன்லைன் மோசடி மூலம் திருடியுள்ளனர்.
முப்பதுக்கும் மேற்பட்டோர் ஒரே பள்ளியில் படித்து வெளியேறிய நிலையில் அவர்களை குறிவைத்து பெற்றொர்களுக்கு கால் செய்து பணம் திருடியுள்ளனர் இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில்
தங்களது பணத்தை திருப்பி பெற்று தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்