Header Top Ad
Header Top Ad

கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்: போலீஸ் அறிவிப்பு

கோவை: விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு கோவையின் சில பகுதிகளில் நாளை (ஆக.,29) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

விநாயகர் சிலைகள் நாளை மதியம் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து புறப்பட்டு குனியமுத்தூர், பாலக்காடு ரோடு வழியாக குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படுவதாலும் மேலும் மதியம் 2 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆரம்பித்து சங்கம் வீதியில் ஒன்று கூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்படுவதை முன்னிட்டு நேரத்திற்கு தகுந்தது போல கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது

பொள்ளாச்சி-உக்கடம்:

பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் எல் அண்டு டி பைபாஸ், ஈச்சனாரி சர்வீஸ் ரோடு வழியாக வந்து ஈச்சனாரியில் விநாயகர் கோவில் முன்பு திரும்பி செட்டிபாளையம் ரோடு வழியாக ஜி.டி. டேங்க், ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி சென்றடைந்து நஞ்சுண்டபுரம் சாலை மற்றும் ராமநாதபுரம் வழியாக செல்லலாம்.

இல்லையென்றால் குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் ஈச்சனாரி, தக்காளி மார்க்கெட்டில் வலது புறமாக திரும்பி சாரதா மில் ரோடு, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

Advertisement

உக்கடம்-பொள்ளாச்சி:

உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவில் இடது புறமாக திரும்பி போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, செட்டிபாளையம் ரோடு, ஜிடி டேங்க், ஈச்சனாரி சென்று பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.

இலகுரக வாகனங்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு, போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பில் வலது புறமாக திரும்பி சாரதா மில் ரோடு வழியாக பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.

உக்கடம்-பாலக்காடு:

உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக அசோக் நகர் ரவுண்டானா, செல்வபுரம் மேல்நிலைப் பள்ளியின் இடப்புறம் திரும்பி சிவாலய சந்திப்பு, பேரூர், சுண்டக்காமுத்தூர், கோவைபுதூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்ல வேண்டும்.

இலகுரக வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் வழியாக அசோக் நகர் ரவுண்டானாவில் இடது புறம் திரும்பி புட்டுவிக்கி ரோடு வழியாக பாலக்காடு நோக்கி செல்லலாம்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

பாலக்காடு-உக்கடம்:

பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனம் மற்றும் பேருந்துகள் பாலக்காடு ரோடு, கோவை புதூர் பிரிவில் இடது புறமாக திரும்பி கோவை புதூர் ஆஷ்ரம் பள்ளி, பேரூர், செல்வபுரம் சிவாலய சந்திப்பு வழியாக செல்வபுரம் மேல்நிலைப் பள்ளியின் வலது புறமாக திரும்பி அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் கோவைபுதூர் பிரிவு குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாயில் இடது புறமாக திரும்பி புட்டுவிக்கி சாலை, அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

Recent News