கோவை: பெற்றோர் சம்மத்துடன் கனடாவை சேர்ந்த பெண்ணை மணந்த கோவை இளைஞர்.
கோவை நவ இந்தியா பகுதியை சேர்ந்த மோகன்-பிரேமலதா தம்பதியரின் மகன் கௌதம், கனடாவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பயின்றுள்ளார். கல்லூரி பயின்றபோது அமெரிக்கா வாஷிங்டன் டி.சி பகுதியை சேர்ந்த ராபர்ட் டக்ளஸ் பிராட், எலினிட்டா யசன்யா பிராட் தம்பதியரின் மகள் சாரா என்பவரை காதலித்துள்ளார். இது குறித்து இருவரும் பெற்றோர்களிடம் கூறி திருமணம் செய்து கொள்ள சம்மதம் வாங்கினர்.

பின்னர் படிப்புகள் முடிந்து பணிக்கு சேர்ந்த நிலையில் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கோவை கொடிசியா பகுதியில் தமிழ் கலாச்சார முறைப்படி நடந்தது.
தமிழ் கலாச்சார முறைப்படி பத்திரிக்கை அடித்து மணமகனின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டு இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.