Coimbatore Gold rate: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.680 விலை உயர்ந்து புதிய உச்ச விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கோவையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) கிராமுக்கு ரூ.85 விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, பவுனுக்கு ரூ.680 விலை அதிகரித்து, இதுவரை இல்லாத வகையில் ஒரு பவுன் ரூ.77,640க்கு விற்பனையாகி வருகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75, பவுனுக்கு ரூ.600 விலை அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,030க்கும், ஒரு பவுன் ரூ.64,240க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.136க்கும், ஒரு கிலோ வெள்ளி, ரூ.1,36,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்க வரி விதிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்து வருவதால் தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என்றும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.