Header Top Ad
Header Top Ad

அனிருத் இருக்கும் போது எதற்கு AI? கோவையில் லோகேஷ் கனகராஜ் நச் பதில்!

கோவை: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் எனக் கூறிய லோகேஷ் கனகராஜ் அனிருத் இருக்கும்பொழுது AI எதற்கு? என தெரிவித்துள்ளார்.

கோவை வெள்ளலூர் பகுதியில் SSVM (தனியார்) பள்ளியில் The Future is Here என்ற தலைப்பில் ரோபோடிக்ஸ், AI டெக்னாலஜி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது வரக்கூடிய புதிய திரை துறையினருக்கு நீங்கள் கூறும் அட்வைஸ் என்ன? என்ற மாண்வர்களின் கேள்விக்கு
One is Never Ever Take Advise. Next collaborated இணைந்து பணியாற்ற வேண்டும் என பதில் அளித்தார்

மேலும் படம் பார்த்து தான் வாழ்க்கையை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அது என்னை பொருத்தவரை சரியானது இல்லை, ஒரு சினிமா நம்மை இன்புளுயன்ஸ் செய்தால் நாம் வளர்ந்த விதமே தவறாகிவிடும். அப்பா அம்மா இருக்கும்போது ஒரு படம் நம்மை எப்படி மாற்றிவிடும்? படம் என்பது ஒரு பொழுதுபோக்கு தான், ஒரு படம் நம்மை சிந்திக்க வைக்கலாம் ஆனால் அது மட்டுமே போதாது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த வயதிலேயே மாணவர்கள் பேட்டண்ட் வாங்கி ஆய்வுகள் பற்றி பேசியது பெரிய விஷயம் என்றார்.

சினிமா துறையில் ஏஐ குறித்தான கேள்விக்கு AI dominate இருக்காது ஆனால் அதன் உதவி இருக்கும், ஏ ஐ டெக்னாலஜியை பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்றார்.

Advertisement

புதிய தொழில்நுட்பம் வரும் பொழுது காலப்போக்கில் நாம் பழகிக் கொள்வோம் என்றும் தொழில்நுட்பத்தை நாம் எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோம் என்பது நம்முடைய கையில் தான் உள்ளது என்றார்.

கருத்தியல் ரீதியான விஷயங்கள் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பேசியது தொடர்பான கேள்விக்கு வெற்றிமாறன் கூறியது அவருடைய கருத்து என்றும், நான் இப்பொழுதுதான் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளேன், ஆனால் அவர் அதிக படங்களை செய்துள்ளார் என பதில் அளித்தார்.

உங்களது படங்களில் AI எந்த அளவிற்கு பயன்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் குரல் AI தொழில்நுட்பம் தான் என்றார். பலரும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவது குறித்தான கேள்விக்கு நான் அனிருத்தை பயன்படுத்தி வருகிறேன் அதனால் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை.
நானும் அனிருத்தும் நடிப்பது குறித்து அருண் மாதேஸ்வரன் தான் கூற வேண்டும் என தெரிவித்து சென்றார்.

Recent News