மாணவர்களே உங்களுக்காக கோவையில் நடைபெறுகிறது கல்விக்கடன் முகாம்!

கோவை: கோவையில் கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் பவன் குமார் கூறியிருப்பதாவது:-

Advertisement

கோவை மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அன்று பீளமேடு, பிஎஸ்ஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

கல்விக்கடன் பெற தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடன் வழங்கும் பொருட்டு (Core Committee) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உறுப்பினர் செயலராக கொண்டு 10 அலுவலர்கள் கொண்ட முதன்மை குழுவினை அமைத்து இப்பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தரைத்தளம் அறை எண் 16-ல் தனியாக கண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு கல்வி கடன் வழங்கும் பணியினை மேற்பார்வை செய்து வருகிறது.

எனவே, உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் அனைவரும் எதிர்வரும் 11ம் தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பீளமேடு, பிஎஸ்ஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • பான் கார்டு
  • ஆதார் கார்டு
  • 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
  • 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
  • கல்லூரிக் கட்டண விபரம்
  • கல்லூரியில் பயில்வதற்கான சான்றிதழ் (Bonafide Certificate)
  • வருமான சான்றிதழ்
  • ஜாதிச் சான்றிதழ் (optional)
  • வங்கிக் கணக்கு புத்தகம்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 1

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

  • குடும்ப தலைவர் / தலைவியின் பான் கார்டு
  • ஆதார் கார்டு
  • வங்கிக் கணக்கு புத்தகம்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 1

உள்ளிட்ட மூல ஆவணங்களுடன் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த செய்தியை உங்கள் சுற்றத்தாருக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group