Header Top Ad
Header Top Ad

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எவ்வளவு வரி குறைப்பு? எவ்வளவு அதிகம்? விவரம் இதோ!

நாட்டின் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா தலைமையில் ஆலொசனை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு GST என்ற சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் வசூலிக்கும் ஒரு சில வரிகள் தவிர்த்து, மற்ற வரிகள் அனைத்தும் GST வரி விதிப்பு முறைக்குள் கொண்டுவரப்பட்டது.

ஒரு பொருளின் அவசியம், நுகர்வு மற்றும் தேவையின் அடிப்படையில் அந்த பொருட்களுக்கு GST வரி விதிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது நாட்டில் 5%, 12%, 18% மற்றும் 28% என்ற நான்கு அடுக்குகளில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி விதிப்பு முறை மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பு கிளம்பியது.

இதன் காரணமாக சமூகம் மற்றும் தனி மனிதனுக்கு தீமை தரக்கூடிய பொருட்களுக்கும் ஆடம்பரப் பொருட்களுக்கும் 290% வரை வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு முறை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனிடையே நாட்டில் நுகர்பொருட்களுக்கான வரி குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், இன்றும் நாளையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் GST Council Meeting நடைபெற்று வருகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல், 4 அடுக்குகளாக வசூலிக்கப்பட்டு வரும் GST வரியை 2 அடுக்குகளாக குறைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

அதாவது, 5%, 12%, 18% மற்றும் 28% என்ற வரி விதிப்பு முறைகளுக்கு மாறாக, 5% மற்றும் 18% என்ற இரண்டே அடுக்குகளில் வரி விதிப்பை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, அத்தியாவசிய நுகர்பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 12% வரியை 5%க்குள் கொண்டு வரவும், 28% வரி விதிக்கப்பட்டு வரும் பொருட்களை 12%க்குள் கொண்டு வரவும் முடிவாகியுள்ளது.

எனவே இந்தியாவில் இனி 5% மற்றும் 18% வரி விதிப்பே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் விலை குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தினசரி நுகர்பொருட்களான சோப்பு, பேஸ்ட், தொடங்கி எலெக்ட்ரானிக் பொருட்கள் வரை விலை குறையும்.

12 & 28% நீக்கப்பட்டால் வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் விலையும் கணிசமாகக் குறையும். அதே நேரத்தில் ஆடம்பர வாகனங்களுக்கு வரி அதிகரிக்கப்படுகிறது.

கேடு தரும் பொருட்கள், புகையிலை, மது உள்ளிட்ட பொருட்களுக்கு 40% வரை GST வரி விதிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த தீபாவளிக்கு வரி வசூலில் இருந்து மக்களுக்கு நல்லதொரு நிவாரணம் கிடைக்கும் என்று ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

GST வரி மற்றும் குறைப்பு தொடர்பான அடிப்படை விவரங்களை தெரிந்து கொள்ளும் விதமாக, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்து உதவலாம்.

Recent News