Header Top Ad
Header Top Ad

கோவையின் பாரம்பரிய ஹோட்டல்: அங்கண்ணன் 4வது கிளை!

கோவை: கோவையில் பாரம்பரிய பிரியாணி உணவகமான அங்கண்ணன் பிரியாணி நிறுவனம் சார்பில் நான்காவது உணவக கிளையாக துடியலூர் பகுதியில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

கோவையில் பாரம்பரிய உணவகமான அங்கண்ணன் பிரியாணி உணவகம் கடந்த 1925 ஆம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்டது. வெரைட்டி ஹால் சாலையில் துவங்கி கோவை மக்களின் மிகப்பெரும் ஆதரவுடன் இயங்கி வந்த இந்த உணவகம் தற்பொழுது வடகோவை சரவணம்பட்டி பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்பட்டு வரும் சூழலில் நான்காவது கிளையாக கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் அங்கண்ணன் பிரியாணி உணவகம் இன்று திறக்கப்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்நிறுவன இயக்குனர் சந்தீப், கோவையில் பிரியாணிக்கு என பல்வேறு உணவகங்கள் செயல்பட்டு வந்தாலும் கோவையில் மிகப் பழமையான அங்கன் பிரியாணி உணவகம் பொதுமக்களின் பேராதரவுடன் செயல்பட்டு வருவதாகவும் கொங்கு நாட்டு முறைப்படி தங்கள் உணவகத்தில் பிரியாணி தயாரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதிக மசாலாக்கள் இன்றியும் அஜினோமோட்டோ போன்ற வேதிப்பொருட்கள் இல்லாமலும் பிரியாணி தயாரிப்பதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் தான் தங்கள் நிறுவன பிரியாணிக்கு என தனி சிறப்பு உண்டு என்றும் தங்கள் உணவகத்தில் சிக்கன் மட்டன் பிரியாணி மட்டுமின்றி புரோட்டா கோழி இறைச்சி ஆட்டு இறைச்சி ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பல வகை உணவு பதார்த்தங்கள் வாடிக்கையாளர்களின் ருசிக்கு ஏற்ப பரிமாறப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்து வருவதாகவும் 24 மணி நேரமும் கடை இயக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறிய அவர், கோவையில் அடுத்தடுத்த கிளைகள் துவங்குவது தொடர்பாக நல்ல இடங்களை தேடி வருவதாகவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய அங்க அண்ணன் பிரியாணி நிறுவனர் அங்க அண்ணனின் பேத்தியான ஜெயஸ்ரீ, அடுத்த ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடவர்க்கும் தங்களது அங்க அண்ணன் பிரியாணி நிறுவனம் இன்று வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் ருசியில் பிரியாணி உணவு தயாரித்து வழங்குவது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் இன்றும் கடை துவங்கிய காலத்தில் பிரியாணி உணவு அருந்திய ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்களது உணவகத்திற்கு வந்து உணவு உட்கொள்ளும் பொழுது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதாக கூறினார்.

Advertisement

ஒரு சிலர் தன்னை காணும் போது அங்கண்ணனின் பேத்தி உன்னை சிறுவயதில் பார்த்தது ஆனால் அன்று இருந்தது போன்ற அதே ருசியில் இன்றும் பிரியாணி உங்கள் உணவகத்தில் கிடைக்கிறது என்று கூறும் பொழுது தங்கள் நிறுவனத்தின் பாரம்பரியத்தை நினைத்து பெருமிதம் கொள்வதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Recent News