கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெளிநாட்டில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 10 நாட்களில் இன்று நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

வெடிகுண்டு மிரட்டல் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தொடர்ந்து அங்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அலங்கார செடிகள் உள்ள இடம் காம்பவுண்ட் சுவர் என அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

Advertisement

கடந்த 3 முறை இந்தியாவில் உள்ள பகுதியில் இருந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது வெளி நாட்டில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வரும் நிலையில் சைபர் கிரைம் போலிசார் யார் இந்த மிரட்டலை விடுகின்றனர் என தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News

Video

கோவை அருகே கொட்டகையை உடைத்து உள்ளே நுழைந்த யானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மாட்டு தீவனங்களை காட்டு யானை தின்று சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை,...
Join WhatsApp