கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை- உற்சாகமடைந்த குழந்தைகள்…

கோவை: கோவை மாநகரில் சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாகவே அதிக அளவிலான வெயில் வாட்டி வருகிறது. இரவு நேரங்களில் சற்று இதமான சூழல் இருந்தாலும் காலை மதியம் ஆகிய நேரங்களில் அதிக அளவிலான வெயில் கோவையில் நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டது. சூலூர், கருமத்தம்பட்டி, அன்னூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்து வெப்பத்தை தணித்தது. அதேசமயம் கோவை மாநகரிலும் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

குறிப்பாக சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை பெய்து பல மாதங்கள் ஆன நிலையில் இன்று திடீரென பெய்த ஆலங்கட்டி மழை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தைகள் பலரும் ஆலங்கட்டிகளை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

Advertisement

கோவையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் கனமழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...