கோவை வரும் இபிஎஸ்; பொதுமக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு!

கோவை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோவை வரவுள்ள நிலையில், பொதுமக்களுக்கும், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்க தமிழர் பேரவை துணை பொது செயலாளர் காசு நாகராசன் தலைமையில் ஐந்து பேருக்கும் மேற்பட்டோர் இன்று காலை 11 மணியளவில் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இந்த மனுவை அளித்தனர்.

Advertisement

அதில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களால் கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும். கோவை மருத்துவமனைகள் நிறைந்த பகுதி என்பதால், புறநகரப் பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாகவும், திருச்சி துறையூரில் முன்னர் நடந்த சம்பவம் அதற்கு உதாரணம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

எனவே, மருத்துவ உதவிக்காக வரும் பொதுமக்களும், மருத்துவச் சேவையில் ஈடுபடும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களும் பாதுகாப்பாகச் செல்ல காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

Recent News

நவம்பர் 1ம் தேதி முதல் வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்- இ- பாஸ் பதிவு செய்ய லிங்க் இதோ..

கோவை: நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு வருகின்ற...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp