Header Top Ad
Header Top Ad

இங்க மட்டுமா பிரச்சனை இருக்கு? கோவை அரசு மருத்துவமனை டீன் கொடுத்த விளக்கம்!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் வீல்சேர் இல்லாததால் தந்தையை சுமந்து சென்ற மகனின் வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், அவர்கள் 15 நிமிடங்கள் மட்டுமே காத்திருந்ததாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக தந்தையை அழைத்து வந்த மகன் வீல்சேர் அல்லது ஸ்ட்ரக்சர் கேட்ட நிலையில் அதற்கு அங்கு பணிபுரியும் கிரிஸ்டல் என்ற ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரம் காத்திருந்தும் அந்த உதவி கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர் தந்தையை தோளில் சுமந்தபடி மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து ஆட்டோவில் அழைத்துச் சென்றார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இது குறித்து அரசு மருத்துவமனை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில் கிறிஸ்டல் ஒப்பந்த நிறுவன பணியாளர்கள் மணிவாசகம், மற்றும் எஸ்தர் ராணி ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் டீண் கீதாஞ்சலி கூறியதாவது:-

வீல் சேர்கள் நம்மிடம் போதுமான அளவு உள்ளது. அந்த நபர் வீல் சேர் வேண்டும் என இரண்டு மணி நேரம் காத்திருந்ததாக கூறப்பட்டதில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் 15 நிமிடம் தான் காத்திருந்தனர் என்பது தெரிந்தது.

கூடுதலான வீல் சேர்கள் ஸ்ரெட்ச்சர் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாமதமே ஆகக்கூடாது என்று நோயாளிகள் தரப்பில் எண்ணுகின்றனர். அதை நாம் குறை கூற முடியாது. எனவே தேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தற்பொழுது வெளியாகியுள்ள வீடியோவில் ஊழியர்கள் பணம் கேட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இதற்கு முன்பு ஒரு இரு சம்பவங்கள் நடந்ததில் ஆதாரம் இருந்ததால் உடனடியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நோயாளிகளிடம் கோபமாக இல்லாமல் ஜென்டிலாக பேசும்படி அறிவுறுத்தியுள்ளோம்.

புறநோயாளிகள் பிரிவில் 10 வீல் சேர்கள் உள்ளன. கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் இந்த பிரச்சனைகள் இல்லை பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளது. இவ்வாறு டீன் கூறினார்.

Recent News