Header Top Ad
Header Top Ad

பதவி உயர்வில் முறைகேடு- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்

கோவை: ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் நுழைவாயில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கோவை, வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வுக்காக 300 க்கும் மேற்பட்ட இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தகுதி கோரி தேர்வு எழுதி இருந்தனர்.

இந்த தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு தராமல் குறைந்த அளவு மதிப்பெண் பெற்ற 23 இணைப் பேராசிரியர்களக்கு மட்டும் பேராசிரியராக பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பதவி உயர்வு வழங்கியதை கண்டித்தும் அதிகளவு மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரியும் இணை பேராசிரியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் பல்கலைக் கழக வளாகத்தில் நுழைவாயில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இது குறித்து அவர்கள் கூறும் போது இந்த தகுதி தேர்வில் அதிக அளவு மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.குறிப்பிட்ட 23 பேருக்கு மட்டும் பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

இது ஏன் ? என்று பல்கலைக் கழக பதிவாளரிடம் கேட்ட போது சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. எனவே பல்கலைக் கழக நிர்வாகத்தை கண்டித்தும் அதிக மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்களுக்கும் பதவி உயர்வு கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Recent News