கோவை: பேருந்தில் மூதாட்டியிடம் செயினை
திருடும் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை நீலிகோணம்பாளையம் சக்தி நகர் சேர்ந்த லட்சுமி (73) என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சூலூரில் உள்ள மகளை பார்த்துவிட்டு தனியார் பேருந்தில் கோவை வந்துள்ளார்.
அப்போது அருகில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பேருந்தில் அருகே அமர்ந்திருந்துள்ளார். பின்னர் அவர் லட்சுமி அணிந்திருந்த செயின் கொக்கி கழண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால் மூதாட்டி செயினை கழட்டி தனது பரிசில் வைத்துள்ளார்.
பின்னர் ராமநாதபுரம் சந்திப்பில் இறங்கிய லட்சுமி பரிசை சோதனை செய்த போது அதிலிருந்த செயின் மாயமாக இருந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலிசார் விசாரணையில் செயினை திருடியது நதியா (38) என்பதும் அவர் மீது உக்கடத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் நதியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.தற்போது அந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.