கோவையில் போதை இளைஞர்கள் அட்டகாசம் – கார்கள் மீது மோதிய வீடியோ வெளியீடு!

கோவை: கோவையில் போதையில் இருவராக வந்த இளைஞர்கள், பைக்கில் தாறுமாறாக ஓடி கார்கள் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பல்வேறு இடங்களில் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் போலீசார் அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞர்கள் மீது கண்காணிப்பு மற்றும் அபராத நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வடவள்ளியில் இருந்து கோவை மாநகருக்குள் செல்லும் லாலி சாலையில், போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் பைக்கில் தாறுமாறாக ஓடி கார்கள் மீது மோதினர். சேதத்தை ஏற்படுத்திய பின்னரும் தப்பிச் செல்ல முயன்ற அவர்களை சக வாகன ஓட்டிகள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செல்போனில் பதிவு செய்த இந்த காட்சிகளை News Clouds Coimbatore வாசகர் ஹரிஹரன் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தாக இருக்கும் இப்படிப்பட்ட போதை ஆசாமிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp