ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள்- கோவையில் செங்கோட்டையன் பேட்டி

கோவை: ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக, கோவை விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,

எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த கெடு இரண்டு நாட்களில் முடிவடைய உள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எல்லாம் நன்மைக்கே என பதில் அளித்தார்.

ஓ.பி.எஸ், டி.டி.வி கட்சி ஆதரவாளர்கள் செங்கோட்டையனை சந்தித்து வருவது தொடர்பான கேள்விக்கு,
தன்னைப் பொறுத்த வரை இயக்கம் நன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் இணைய வேண்டும் வெற்றி என்ற இலக்கு, அம்மாவுடைய ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் தன்னுடைய முழு ஆசை என தெரிவித்தார்.

Advertisement

மீண்டும் செல்வீர்களா என்ற கேள்விக்கு, தான் தற்போது திருமணத்திற்கு செல்வதாக பதில் அளித்த செங்கோட்டையனிடம் எப்போது அ.தி.மு.க வில் ஒன்றிணைவார்கள் என்ற கேள்விக்கு, அனைவரும்
ஒரு மாதத்தில் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

Recent News

கோவையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்- சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரிடம் நீதிபதி விசாரணை- நீதிமன்ற காவல் உத்தரவு

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு 19ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை...

Video

தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை- அலறி அடித்து ஓடிய மக்கள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம்,...
Join WhatsApp