Header Top Ad
Header Top Ad

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் இணைப்பு அட்டை- கோவை வந்தடைந்தார் உதயநிதி ஸ்டாலின்

கோவை: மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் இணைப்பு அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார்.

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2000 கோடி ரூபாய் மதிப்பில் வங்கிக் கடன் இணைப்பு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் கடன் அட்டைகள் வழங்கப்படுகிறது.

Advertisement

கோவையில் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் ஆகியோர் சுய உதவி குழுக்களுக்கு அடையாள அட்டையை வழங்குகின்றனர்.

இதில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். தொடர்ந்து சாலைமார்க்கமாக சேலம் புறப்பட்டார் கோவை வந்த அவருக்கு திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

Recent News