கோவை: மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமான கலாச்சார விழாவாக “Ableity’25” நிகழ்ச்சி கோவை நவஇந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர். அரங்கத்தில் நடைபெற்றது.
பாடல், நடனம், இசைக்கருவி மற்றும் “As You Like It” போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறப்பு திறனாளிகள் தங்கள் திறமைகளை மேடையில் வெளிப்படுத்தினர்.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 120 சிறப்பு திறமையாளர்கள் – ஆட்டிசம் கொண்டோர், காதுகேளாதோர், மூகவாதம், பார்வையற்றோர் மற்றும் உடல் இயக்கக் குறைபாடு உடையோர் இந்த நிகழ்வில் பங்கேற்று தங்களின் ஆற்றலை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உதவி கலெக்டர் பிரஷாந்த், மற்றும் ரோட்டரி கோவை மாவட்ட ஆளுநர் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.75,000 மதிப்புள்ள ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து 5 சீசன்களாக மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்று வரும் கலாச்சார நிகழ்ச்சி என்ற பெருமையோடு “Ableity” விழா, இந்தியப் பதிவுகள் புத்தகத்தில் (Indian Book of Records) சிறப்பு சாதனையாக பதிவாகியுள்ளது.

சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, பங்கேற்ற ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நாளாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.