கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட தீய 5 மணி நேரம் போராடி அணைத்தனர்
கோவை வெள்ளலூரில் உள்ள குப்பைக்கிடங்கில், மாநகரில் தினமும் சேகரமாகும் 1,100 டன் குப்பை கொட்டப்படுகிறது.
இங்கு வெயிலின் தாக்கம் மற்றும் சில சமூகவிரோதிகளின் செயல்களால் அடிக்கடி குப்பை தீப்பற்றி எரிகிறது.
இந்நிலையில், நேற்று இரவு நள்ளிரவில் 12 மணியளவில் திடீரென குப்பை கிடங்கில் பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது.
இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையங்களுக்கும் மாநகராட்சி துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது அதன் பேரில், கோவை தெற்கு, கிணத்துக்கடவு, கோவைப்புதூர் உள்ளிட்ட 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.

சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து குப்பையில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.
கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வேறு ஏதேனும் காரணமா? அல்லது நாச வேலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தீ விபத்து காரணமாக எழுந்த புகையில், அருகாமையில் வசிக்கும் மக்கள் கடும் சிரமமடைந்தனர்.