Header Top Ad
Header Top Ad

பெரியாரின் 147 வது பிறந்தநாள்- கோவையில் கருஞ்சட்டை பேரணி…

கோவை: கோவையில் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கருஞ்சட்டை பேரணியில் குழந்தைகள் உட்பட முன்னோருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கருஞ்சட்டை பேரணியில் அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் மற்றும் கட்சியினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு இந்த நாளை சமூக நீதி நாள் என்று அறிவித்து உள்ளது.

இந்நிலையில் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. இதில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, மே 17 இயக்கம் உட்பட பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் மற்றும் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

சிவானந்தா காலனி யு.கே.சிவஞானம் நினைவுத்திடலில் துவங்கிய இந்த பேரணியானது 100 அடி சாலை வழியாக காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு உள்ள பெரியார் சிலை முன்பு நிறைவு பெற்றது.

பறை இசை, செண்டை மேலங்களுடன் நடைபெற்ற இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் பெரியாரைப் போற்றியும், பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக கல்வி நிதியை வழங்க வேண்டும், இந்தி மொழி திணிப்பை கைவிட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Recent News