Header Top Ad
Header Top Ad

விஜய் எடுக்க போவது திமுக ஓட்டுகளை தான்- கோவையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி…

கோவை: விஜய் எடுக்க போவது திமுக ஓட்டுகளை தான் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று நடைபெறும் மோடி தொழில் மகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மோடி தொழில் மகள் எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் கலந்து கொள்கிறேன். எப்பொழுதும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்வதாகவும் இது ஆக்கபூர்வமான நிகழ்ச்சி என்றும் தெரிவித்தார். நாங்கள் மோடியின் தொழில் மகள் திட்டத்தில் கலந்து கொள்கிறோம் அதேசமயம் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது, யார் அந்த சார் என்ற கேள்வி இன்னும் தொடர்ந்து வருகிறது என்று கூறினார்.

இதுபோன்று கவலை அளிக்கக்கூடிய சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் காசா போரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதற்கு மோடி தான் காரணம் என்றும் கூறுகிறார்கள் என்றும் தெரிவித்த அவர் இதிலிருந்து அவர்கள் அரண்டு போய் உள்ளார்கள் என்பது தெரிகிறது என தெரிவித்தார்.

Advertisement

கீழடிக்கு நிதியை ஒதுக்கியது பிரதமர் மோடி என்றும் நீங்கள் மத்தியில் இருக்கும் பொழுது எத்தனை தொல்பொருள்களை எடுத்து அங்கீகாரம் கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார். தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருப்பவர் பிரதமர் மோடி தான் அதற்கு சிபி ராதாகிருஷ்ணன் ஒரு சான்று என கூறினார்.

தமிழுக்கு நாங்களும் தான் சொந்தக்காரர்கள் என தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன் தமிழுக்கு நீங்கள் மட்டும்தான் சொந்தக்காரர்கள் என்று கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஒன்று இருந்தது என குறிப்பிட்ட அவர் தேர்தல் ஆணையத்தால் கூட அங்கீகரிக்கப்பட முடியாத கட்சிகளில் நாற்பத்தி இரண்டில் ஒரு கட்சியாக அதனை நீக்கி உள்ளார்கள் என தெரிவித்தார்.

திராவிட கட்சிகளுக்கு எதிராக தான் அரசியல் வாழ்வை கொண்டு வருவேன் என்று கூறிய அவர் திமுக எதை கூறுகிறதோ அதனை கேட்க வேண்டும் அதற்கு அடிபணிய வேண்டும் என்றும் சுயநலத்திற்காக உங்களுடன் வந்த கட்சிகளை எல்லாம் அங்கீகாரம் இல்லாமல் செய்து விட்டு அவருக்கு ஒரு எம்பி பதவி கிடைத்தவுடன் திமுகவின் ஊதுக்குழலாக மாறிவிட்டார் என தெரிவித்தார். அது ஒரு சுயநல அரசியல் என்றும் பொதுநல அரசியலில் இருப்பது பாஜக மற்றும் எங்கள் கூட்டணி தான் தான் என்றும் தெரிவித்தார்.

கமல் திமுகவுடன் கட்சியை இணைத்தார் என்றால் பாஜகவுடன் சரத்குமார் அவரது கட்சியை இணைத்திருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், சரத்குமார் எங்களுடன் கட்சியை தான் இணைத்தார் ஆனால் இவர்கள் கூட்டணி கட்சி என்று சொல்லி ஒரு எம்பி பதவியை வாங்கி உள்ளார்கள் என்றார். கமல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரா உறுப்பினரா அல்லது திமுகவின் தலைவரா உறுப்பினரா என கேள்வி எழுப்பிய அவர் கமலுடைய கட்சி அங்கீகாரத்தை இழந்து இருக்கிறது, அதையும் சரத்குமார் கட்சியையும் எப்படி ஒப்பிட முடியும் என்று வினவினார்.

திருமாவளவன் பஞ்சமி நிலத்தை மீட்கிறேன் என்று கூறி வருவதை குறிப்பிட்ட தமிழிசை சௌந்தரராஜன் இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வரப்போகிறது திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் திராணி இல்லாதவர் திருமாவளவன் என்றும் சாடினார். 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையுடன் போட்டி போடும் இந்தியா கூட்டணி, திராவிட மாடல் வெலவெலத்து போகும் என தெரிவித்தார்.

காங்கிரஸ் கேட்ட இடங்களுக்கு திமுக என்ன சொல்லப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணி கட்சிகளை நம்பிக்கையும் இழந்து விட்டது மக்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது என தெரிவித்த அவர் வீட்டுக்கு செல்ல வேண்டியது தான் அவர்களுடைய வேலை என்பது என்னுடைய கருத்து என கூறினார்.

திமுகவுடன் கூட்டணி வைப்பது புனிதமானது என்று கமல் கூறிய கருத்துக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், சிரித்துக் கொண்டே காதல் புனிதமானது என்று சொன்னவர் தற்பொழுது கூட்டணி புனிதமானது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார் அவர் எதை புனிதமானது என்று சொல்லி இளைஞர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் என்பதுதான் ஞாபகத்திற்கு வருவதாக தெரிவித்தார். திமுகவை எதிர்த்து டிவியை உடைப்பேன் என்று கட்சியை ஆரம்பித்த கமலஹாசன் எப்படி புனிதம் பெற்றீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் கமலஹாசன் தனி மனிதன் தான் என்றும் தனி கட்சி கிடையாது என்றும் கட்சி நடத்த தெரியவில்லை என சாடினார்.

விஜய் ஒரு ஆக்டர் நாங்கள் டாக்டர் என தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், விஜய்க்கு வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்களா என்று தெரியாது தேர்தல் வரட்டும் அதனை பார்த்துக் கொள்ளலாம் ஆனால் வேடிக்கை பார்ப்பதற்கு கூட்டம் வரும் எங்களுக்கும் கூட்டம் வரவில்லை என்று சொல்ல வேண்டாம் என தெரிவித்தார். கட்சித் தலைவராக விஜய் தற்பொழுது தான் அரசியலுக்குள் வந்துள்ளார் அரசியலில் போராட்டங்களை அவர் நடத்தியது கிடையாது என்றும் திமுகவிற்கு அவர் சவாலாக இருக்கட்டும் திமுகவிற்கு எதிரான எதிர்ப்பை அவர் தீவிரபடுத்தட்டும் திமுகவை வீட்டுக்கு அனுப்புகின்ற கடமை எங்களுக்கும் உள்ளது விஜய்க்கும் உள்ளது என தெரிவித்தார்.

தற்பொழுது நடப்பது பாராளுமன்ற தேர்தல் அல்ல சட்டமன்றத் தேர்தல் என்பதை விஜய்க்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அவர் யார் வீட்டுக்குள் இருக்கிறார்களோ அவர்களை தான் வெளியில் அனுப்ப வேண்டும் அப்படி பார்த்தால் சட்டமன்றத் தேர்தலில் கோட்டைக்குள் அமர்ந்திருப்பது திமுக தான் அவர்களை தான் அனுப்ப வேண்டும் என கூறினார்.

விஜய்க்கு டைரக்ட் செய்பவர்களையும் ஸ்கிரிப்ட் ரைட்டரிடம் கொடுத்தாள் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் என தெரிவித்தார். விஜய் நன்றாக தான் பேசுகிறார் நன்றாக தான் நடிக்கிறார் என்றார். பிரச்சாரத்தில் யாரையும் மயக்கம் அடைய விடாமல் தண்ணீர் எல்லாம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். காவல்துறையினர் விஜயின் பிரச்சாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு கட்சிக்கு மட்டும் நெருக்கடி கொடுக்கக் கூடாது என்றும் கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் என்ன நடந்தது என கேள்வி எழுப்பினார். கடந்த முறையே காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளித்து இருந்தால் பலரும் மயங்கி விழுந்திருக்க மாட்டார்கள் என்றும் காவல்துறை தற்பொழுது முழுவதும் திமுகவில் இணைந்து விட்டார்கள் என்றும் எனவே அவர்கள் திமுக கூட்டத்திற்கு தான் செல்வார்கள் என விமர்சித்தார்.

விஜய் வாக்கு சதவீதத்தை பிரிக்கலாம் என தெரிவித்த அவர் விஜய் எடுக்கப் போவது திமுக கூட்டணி ஓட்டுகளை தான் என தெரிவித்தார். திமுகவை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்றும் ஆனால் ஏதோ பாஜகவையும் ஏதோ தொடுவோம் என்று தான் பேசுகிறார் அது வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 2026 தேர்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல் அதில் விஜய்க்கும் பங்கு உள்ளது என்றார்.

திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் திமுகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் கூட்டணிக்கு வரலாம் என்றும் அதே சமயம் இந்த கூட்டத்திற்கு வலு சேர்க்காமல் இருப்பவர்களும் திமுகவிற்கு ஆதரவாக இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து என்று கூறினார். நான் யாருக்கும் அழைப்பு விடவில்லை என்றும் திமுகவை தோற்கடிப்பது அனைவரது கடமை என தெரிவித்தார்.

அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரையும் சேர்த்து பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, கட்சி தலைமை முடிவை என்னால் கூற முடியாது என்னுடைய விருப்பத்தை தான் கூற முடியும் எங்களுடைய விருப்பம் அனைவரும் இணைந்து இருக்க வேண்டும் என தெரிவித்தார். திமுக வீட்டிற்கு அனுப்பப்படும் என்பதில் குழப்பம் இல்லை அதற்கு எப்படி ஓட்டு வாங்க வேண்டுமோ அப்படி வாங்கிக் கொள்வோம் என தெரிவித்தார்.

விஜயை சிலர் ஒருமையில் பேசுவதும் குறிப்பாக சீமான் ஒருமையில் பேசி வருவதும் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், எந்தக் கொள்கையில் உள்ள தலைவர்களாக இருந்தாலும் எந்த எதிர்வினை ஆற்றுகின்ற தலைவர்களாக இருந்தாலும் மரியாதை குறைவாக யாரையும் பேசக்கூடாது ஒருமையில் பேசக்கூடாது என தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட என்னை அறிவில்லையா என்று கேட்கிறார் என்றும் அவரைவிட நான் படித்தவர் இல்லாமல் பேசுபவர் என்றும் அவரை என்றாவது ஒருநாள் பேப்பர் இல்லாமல் பேச சொல்லுங்கள் யாருக்கு அறிவாற்றல் இல்லை என்று தெரிந்துவிடும் என கூறினார். தமிழர்கள் மரியாதை கொடுத்து பழக்கப்பட்டவர்கள் என தெரிவித்த அவர் அவர்கள் உண்மையான தமிழர்களாக இருந்தால் மரியாதையோடு பேசுவார்கள் என்பது என்னுடைய கருத்து என்றார்.

அரசியல் விழாக்களை youtube இன்புளுயன்சர்களை வைத்து பேச வைப்பது குறித்தான கேள்விக்கு, தற்பொழுது மக்களிடம் இன்புளுயன்ஸ் சென்று விட்டது என்றும் youtube இன்புளுயன்சர்கள் வசனத்தை ஒரே மாதிரி மாற்றாமல் பேசி வருவதாக கூறிய காமெடியாக விமர்சித்த அவர், ஸ்டாலினுக்கு கோபம் வந்தது சம்பவம் வந்தது பின்பு கோபம் வந்தது ஓட்டு விடாது வீட்டுக்கு போக வேண்டியதுதான் அதுதான் நல்லது இதனை ரீலிஸில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி சென்றார்.

Recent News